Friday, August 6, 2010

கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம்


தமிழ் படங்களில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் மலையாள ரசிகர்களிடம் தமிழ் ஹீரோக்கள் மீதான மோகம் பரவுகிறது. கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த், பாலா போன்றோர் மலையாள படங்களில் நடிக்கின்றனர்.
 
கேரளா வரவுகளான அசின், நயன்தாரா, பாவனா, நவ்யா நாயர், கோபிகா, மீராஜாஸ்மின் போன்றோர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்கள். மம்முட்டி, மோகன்லால் போன்றோர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளனர்.
 
சமீபத்தில் ரிலீசான “பழசி ராஜா” படம் மூலம் கேரள ரசிகர்களை சரத்குமார் கவர்ந்தார். அப்படத்துக்கு பின் நிறைய மலையாள பட வாய்ப்புகள் வந்ததாகவும், கிறிஸ்டின் பிரதர்ஸ், ஓரிடத் தொரு போஸ்ட் மேன் ஆகிய இரு படங்களை தேர்வு செய்து நடிப்பதாகவும் சரத்குமார் கூறினார்.
 
ஜெயராமுடன், போர் பிரண்ட்ஸ் மலையாள படத்தில் நடிக்க கமல் ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே கமல் 1970 மற்றும் 80ம் ஆண்டுகளில் நிறைய மலையாள படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது மீண்டும் நடிக்கிறார். இப் படத்தில் ஜெயராம், மீரா ஜாஸ்மின், போன்றோரும் நடிக்கின்றனர்.
 
ரோஷன் ஆண்ட் ரூசின் மலையாள படத்தில் விக்ரம் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறும் போது மலையாள ரசிகர்கள் அன் பானவர்கள் எனது தமிழ் படங்களை விரும்பி பார்க்கிறார்கள். எனவே தான் மலையாள படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன் என்றார்.
 
ஸ்ரீகாந்த் உப்புக்கண்டம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். ஆர்யாவும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
 
விஜய் படங்கள் கேரளாவில் பரபரப்பாக ஓடுகின்றன. அவரது போக்கிரி படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கி வெளியிட்டனர். ரஜினி, சூர்யா போன்றோர்களும் மலையாள படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment