இயக்குனர்: கருணாநிதி தயாரிப்பு: மக்கள் நிதி... (நம்ம தான்)
தினமலரில் நேற்று வந்த கதை
சென்னை : "கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை' என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஜெயலலிதா துவங்கி அ.தி.மு.க., தொண்டர்கள் வரையிலும், சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், நான் ஏதோ சல்லிக்காசு கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும், என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்களையும் வாங்கிக் குவித்திருப்தைப் போலவும் பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள். நான் சிறு பருவத்திலே இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது. கடந்த 1949ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளர் பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.க., துவக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது, விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன்.
என், "மந்திரிகுமாரி' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் துவங்கியது. அப்போது சேலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன் என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என கேட்டார்; ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன். அதுபோலவே, "இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக வசனம் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடியதால், தயாரிப்பளர் எல்.வி.பிரசாத் என் வீட்டிற்கு வந்து முதலில் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார். நான் அந்தக் தொகையைக் கொண்டு திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய்சேய் நல விடுதி கட்டி, அதை அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை அழைத்துச் சென்று திறந்து வைத்தேன்.
அந்தக் காலகட்டத்தில் சென்னை தி.நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள், கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே 5,000 ரூபாய் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு, எனக்கு ஒரு கார் வாங்கித் தந்தார். அந்த காரில் என்னை உட்கார வைத்து கலைவாணரே ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். எல்லா முதல்வர்களின் வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலே தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை, வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடு கூட நான் அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான்.
நான் இத்தனை பொறுப்புகளையும் என் 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக் கொண்டதும் இல்லை. இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வைப்பு நிதியாக ஐந்து கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும், சேமிப்பு கணக்கில் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது. நான் வசிக்கிற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுத்துள்ளேன். இந்த வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் விஷயத்தில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி.
நான் முதல் முறையாக முதல்வராக இருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வக்கீல் தவறு செய்த போது அவர் மீது நடவடிக்கை எடுத்தேன். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கவும், என் மீது இன்னும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுடையோர் காண்பதற்காக. முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நான் ரசித்த கமெண்ட்ஸ் கீழே
sekar - manila,பிலிப்பைன்ஸ்
2010-12-03 05:57:38 IST
Hi All, I have read most of the comments . Some people commented that Jayalaitha has done that or Sasikala has done that why MK can't do that (a) Saiskala and Jayalaitha misused power &corrupted they were thorwn out of power. Don't justify just becasue JJ has done what MK is doing correct. You can't argue in the court that I am not cultprit becasue some one else has done the same. (b) Is it not obvious , now entire TV world and Film world is only his family members are there. How can suddenly all these family get money to produce almost all the movies that is being released (c) MK has a habit whenever he is charged with some corruption and he totally confuses the mass - example he said Raja is dalit hence he is gunned down - go thru' case that is being discussed in Court. Court has pointed out that he overruled some of the observation by PM - don't court is biased becasue Rajais dalit - what is daliit to do with Raja's charges Mk always bring caste, region , 'pahutharivu' , Thruvidam etc whenever he is put on spot (d) I think we are mixing few things - MK is able adminstrator & Poltician the sense he know how to play his card - it doesn't mean we trust every single workd - Can you relaly belive that he didn't even recommend one seat for his very close friend son - Come on you must be dreaming (e) go thru' tapes - the power politics went on within the family - do you mean it is not money - else why did a Corportae PR should be mediating for DMK- In india every department is corrupt hence obviously not even single case could be provded in the court - same happend to JJ as well - tell me which case she was proved - it doesn't mean she is not corrupt. Lalu same entire world knows about the fodder scam - he is still happy....
ran - karuna,இந்தியா
2010-12-03 05:43:12 IST
Noramally big people they will not say what they have , like TATA,BIRLA's, since these TATAs and BIRLAs are work hard andd earned money. People like Karnuna are above these people, so what he is saying I am very poor man I have only one One Wife One Car, One Imcome, one Son , one daughter one post, (CM) all are one so what he says is correct...
Ram - bangalore,இந்தியா
2010-12-03 04:26:38 IST
யோவ் பெருசு... அரசியல்வாதி எல்லாரும் கொள்ளை அடிக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்.. .. நீர் என்னமோ உத்தமபுத்திரன் மாதிரி அறிக்கைலாம் விடுறீர்......
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-12-03 03:49:39 IST
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே. உன்னை புரிந்து கொண்டோம் .உன்னை தெரிந்து கொண்டோம். பரிசு தருவோம் வரும் தேர்தலில்....
Karunanithy - madurai,இந்தியா
2010-12-03 03:46:17 IST
All of you please note that he will be the CM who will rule this state again. Please do not bluff as you all like. If you all have guts, please form a different govt in TN....
தமிழன் மகன் - nattubolt,இந்தியா
2010-12-03 03:42:30 IST
மெய்ஆளுமேவா!!!!!!!!!!!!!!!!!!! தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப நல்லவங்கல். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க!!! நீ நடத்து ராஜா....
காமெடி பீஸ் - சென்னை,இந்தியா
2010-12-03 01:57:52 IST
என்னால முடியல. பின்னி பெடல் எடுக்கிறார் நம்ம தலைவர். நடிப்பு புயல்....
ரஞ்சித் - dubai,இந்தியா
2010-12-03 01:19:48 IST
நீர் எல்லாம் மனுஷனா, தமிழ்நாட்ட ஒரு சுடுகாடா ஆக்கமா விட மாட்டீரா...
கார்த்திக் - chennai,இந்தியா
2010-12-03 01:18:19 IST
இவர் தான் ரெண்டு நாள்களுக்கு முன்னாடி டிவி நியூஸ்ல சொன்னார் நான் என்னுடைய ஆட்சியில் தான் சானார் என்பதை நாடார் என மாற்றினேன் என்று. பிறகு எப்படி இங்கு நான் விருதுநகர் நாடார் லாட்ஜ்ல தங்கினேன் என்று சொல்ல முடிகிறது. பதவியை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார் போல அப்பாவிகள் கேள்வி கேட்காமல் சிந்திக்காமல் இருக்கும் வரை. இனியும் இப்படி இருக்க மாட்டார்கள் என் புரட்சி இளைய சமுதாயம்....
மதுரை ராஜா - மதுரை,இந்தியா
2010-12-03 01:11:06 IST
Dear Chandra ,I 'm happy to read your comment this time because you haven't raised the bogey of casteism .I do hope this may be due to an Aryan Andhyarjina is fighting in Supreme Court to save the reputation of a Dalit minister A .Raja .The same ARYAN auditors only shield our CM and declare the suppressed facts .So PL .dont throw challenges to our enlightened readers of Dinamalar ....
செல்வராஜ்.ம - துபாய்,இந்தியா
2010-12-03 01:03:08 IST
தலைவா பின்னி புட்ட பின்னி, உன்னோட கதையே விட திரைக்கதை சூப்பர்...................................
கே.kumaraswamy - najran,சவுதி அரேபியா
2010-12-03 00:24:01 IST
அனைத்துலக தமிழர்களே ஏழை கருணாநிதிக்கு உங்களால முடுஞ்ச நன்கொடையை போடுங்கையா,,,,,,,,...
duraa - chennai,இந்தியா
2010-12-03 00:23:47 IST
நேற்று ; அண்ணா வின் கட்சிஇணை கொள்ளை .... இன்று : தமிழனின் செல்வம் கொள்ளை .... நாளை : கொள்ளையர் வரலாறில் நீர் முதல் இடம் பெறுவது உறுதி...
தமிழன் - இந்தியா,இந்தியா
2010-12-03 00:18:35 IST
ஜோபெட்..,(சொம்பு) நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..? உண்மை தான்.., அந்த அம்மா கொள்ளை அடிச்சாங்க.., அவங்க முதல் ஆட்சி காலத்துல.., அதுக்கு தான் செருப்பு வரைக்கும் விடியோ காட்டி ஆட்சிய புடுசிட்டீங்க இல்ல.., அப்புறம் மறுபடியும் அந்த அம்மா ஆட்சிக்கு வந்தாங்க.., ஒரு சாதாரண தமிழக குடிமகனா சொன்னால்.., அவுங்க எந்த வகையிலுமே கொள்ளை அடிக்கல.., சொல்லப்போன நல்லது தான் பண்ணின்னாக..,(தவிர்க்க., அரசு ஊழியர்கள்.., ) அரசு ஊழியர்கள் விசயத்துல அவங்க பண்ணினது 50 % சரி 50 % தவறு.., அவங்களோட ஊதிய உயர்வ நிராகரிச்சது சரி.., அவங்கள டெஸ்மா, எஸ்மா ன்னு சட்டம் போட்டு சஸ்பெண்டு பண்ணினது தவறு..,அவங்க தமிழின தலைவர்...!!!!! அவர்களை கைது பண்ணி கொண்டு போகும் போது.., ஐயோ..,கொல்றாங்க.., கொல்றான்களே..,அப்டின்னு சீன கிரியேட் பண்ணி ஆட்சிக்கு மறுபடியும் வந்தது அந்த அம்மாவோட கெட்ட நேரம் மட்டும் இல்லாம நம்ம தமிழ் நாட்டோட கேட்ட நேரம் தான்.., முக்கியமான விஷயம்.., அந்த அம்மா கொள்ளை அடிச்சாலும் சரி.., துண்டு அடிச்சாலும் சரி.., எது பெரிய கொள்ளை ன்னு மக்களுக்கு தெரியும்.., வேற எதுவும் நான் சொல்ல விரும்பல.., ஆனா உன்ன மாதி சொம்ப பார்த்தா தான் எனக்கு வாய், வயிறு மட்டுமில்ல.., இங்க சொல்ல கூடாது..,மத்த எடமெல்லாம் சேர்த்து எரியுது..,...
அப்பாவி தமிழன் - trichy,இந்தியா
2010-12-02 15:09:42 IST
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா நம் கண்களுக்கு சொந்தம் இல்லை... கோடிகளில் தவழும் கேடிகளை நம்பி தெரு கோடிக்கே வந்து விட்டான் அப்பாவி தமிழன்.. வாழ்க நம் சனநாயகம்!...
ஹோநேஸ்ட் raj - பெங்களூர்,இந்தியா
2010-12-02 15:09:13 IST
எதுக்கு பா தப்பா எடுத்து குறீங்க இது கலைஞர் ஓட அடுத்த பட ஸ்கிரிப்ட் ....போங்கையா போங்க புள்ளகுட்டிய படிக்கச் வைகுங்க...கலைஞர் ஏன் எப்படி காமெடி பண்ணறீங்க...உங்களுக்கு நகைசுவை கொஞ்சம் அதிகம் அததுக்கு இது ஓவர்...
paamaran - singapore,சிங்கப்பூர்
2010-12-02 15:09:04 IST
தலைவா காமெடி கிமெடி பானதிங்க, பொறந்த கொளந்த குட நமபாது. கேக்குறவன் கேணய இருந்த எலீ ஏரோப்லனே ஒட்டுது நு சொலுவாங்க....
முத்து - வெள்ளூர்,இந்தியா
2010-12-02 15:05:16 IST
இந்த செய்திக்குதான் இவ்வளவு அதிகமான எதிர்ப்பு குரல்கள் வந்துள்ளது. கருணாநிதிக்கு வெட்கம் மானம் சூடு சுரணை எதுவுமே கிடையாதா. இதை எல்லாம் படிப்பான இல்லையா....
நீயா - out,ஜப்பான்
2010-12-02 14:57:33 IST
நான் அவன் இல்லை ?...
Paamaran - chennai,இந்தியா
2010-12-02 14:56:25 IST
நெஞ்சு பொறுக்குது இல்லையே இந்த கருணாநிதியை நினைத்து விட்டால் ...... கொல்லடி.... சிவசக்தி இந்த கருணாநிதியை .......
Thamizhan - chennai,இந்தியா
2010-12-02 14:51:19 IST
எப்படி ஒரு தரம் கெட்டவனை முதலவரா பெற்றோம் தமிழா........
தமிழன் - கோவை,இந்தியா
2010-12-02 14:49:31 IST
திட்டம் போட்டு திருடர கூட்டம் (கலைஞர் குடுபத்தினர்) திருடிக் கொண்டே இருக்குது....!!!! பகல் கொல்லையா இல்ல இருக்கு...!!!!...
கூரிதாஸ் - சென்னை,இந்தியா
2010-12-02 14:46:02 IST
அப்பிடியே, உங்களோட மற்றும் உங்க ரத சம்மந்தங்களோட சுவிஸ் பேங்க் அக்கௌன்ட் நம்பரையும், அதுல இருக்குற பணத்தோட முழு விவரத்தையும் தெளிவா சொல்லிட்டீங்கன்ன, ரொம்ப உதவியா இருக்கும் ஐயா....
ஜெய் - chennai,இந்தியா
2010-12-02 14:39:35 IST
அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமீ.......
dhakshin - சென்னை,இந்தியா
2010-12-02 14:33:30 IST
முழு பூச்நிகாயி ஒரு கப் கிணத்துல மரிகேறாரு...
Syed - chennai,இந்தியா
2010-12-02 14:32:05 IST
அய்யா, திடுதிப்புன்னு இப்படி ஒரு உண்மையை சொல்ல எப்படி அய்யா மனசு வந்தது. கலக்கிடீங்க போங்க! அய்யா, பாத்து சூதானமா இருந்துகங்க எனா இனிமேல் உங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறவன் ரொம்பவே யோசிப்பான் என்னடா இவரு திடிருன்னு நல்லவரா மாறிட்டருனு பயந்துபோய் போஎஸ் கார்டன் பக்கம் போயடபோறன் அப்புறம் இன்னும் உயிரோடு உள்ள காலத்துக்கு பிள்ளைகள் முதல் பேரன் பேத்திக்கு (ராஜா வழி பேர பிள்ளைகள் வரை) வரைக்கும் இன்னும் சொத்து சேக்கணும், தெரியாத்தனமா இப்படி அவசரப்பட்டு அறிக்கை விட்டுடிங்களே அய்யா மு.க. நாளைக்கி பாருங்க ஜெயலலிலதா என்ன பாடுபடுத்த போராங்களோ....
nallavan - vellore,இந்தியா
2010-12-02 14:30:55 IST
இவன் இன்னமும் தமிழர்களை முட்டாள்னு நினைக்கிறான். உன் கதை இன்னும் நான்கு மாதம் தான்....
முஹம்மத் KJM - மதுரை,இந்தியா
2010-12-02 14:28:57 IST
முதல்வர் கணக்கு வெளியிட்டது போல மற்ற அரசியல் தலைவர்களும், வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஊழல் இல்லாமல் உண்மையான, திறமையான, நேர்மையான ஆட்சி யாரால் கொடுக்க முடியும்? அல்லது கொடுத்து இருக்கிறார்கள் என்பதயும்,இதில் தவறு அதில் தவறு என கோடிட்டு காட்டும் அரசியல்வாதிகள் தான் விளக்கவேண்டும். அல்லது தாங்கள் தவறே செய்யாதவர்கள் ஆகையால் மக்களாகிய நீங்கள் ஏன் எங்களை தேர்ந்து எடுக்ககூடாது என கேட்கலாமே? யாரும் இப்படி கேட்க தயங்குவது ஏன்? இது போன்ற கேள்விகள் எழுகின்றது அல்லவா?...
ம. குமார் - tiruchi,இந்தியா
2010-12-02 14:24:46 IST
2010-ன் சிறந்த காமெடி...
முத்துகுமார் - bangalore,இந்தியா
2010-12-02 14:24:32 IST
அரசியல இதெல்லாம் சகஜமப்பா, அட்ரா சக்க ,அட்ரா சக்க...
கலிச்வர் - chennai,இந்தியா
2010-12-02 14:23:56 IST
ஸ்வீட் அண்ட் சிம்பிள் ஜோக்...
subramanian - salem,இந்தியா
2010-12-02 14:12:39 IST
ரூபாய் நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் வீட்டை இன்று அதே விஇலைக்கு ு நீங்கள் விற்றால் ச்பெக்ட்ரும் விஷயத்ஹில் ஊழல் இல்லை என்று கூறலாம் ....
ரகு - கேரளா,இந்தியா
2010-12-02 14:11:23 IST
தமிழ் திரைக்கு ஒரு நல்ல கமேடியன் கிடைத்துவிட்டான்...ஹி...ஹி......
கவி - ஜெட்டாஹ்,சவுதி அரேபியா
2010-12-02 14:09:46 IST
நம்பிட்டோம் அய்யா...
விஜயகுமார் - நாகப்பட்டினம்,இந்தியா
2010-12-02 14:08:50 IST
மேலே குறிப்பிட்ட வாசகர்களே நண்பர்களே, அவர் எப்படியாவது இருக்கட்டும் தமிழ் உணர்வும் பற்றும் கொண்ட தமிழன் நமக்கா பாடுபட எவரும் உண்டோ, நன்கு யோசித்து கருத்தை தெரிவிங்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழக முதல்வர் ஆனர் அவர் மட்டும் பணக்காரன் ஆகவில்ல அவரை சார்ந்த அனைவருமே வளர்ச்சி அடைந்துதான் இருக்கிறார்கள் சென்னை முதல் குமரி வரை உள்ள எத்தனையோ சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் பெரிய ஆளாகயுல்லன். MGR வேட்டிய்ம் சேலையும் குடுத்தார் நம்ம மக்கள் நம்பி எமர்துபோனது ஒரு 20 வருடம் முட்ட்லாகியது இது வரை இன்னும் மீளவில்லை அதிலிருந்து சில மக்கள். கலைங்கருக்கு பிறகுதான் வளர தொடங்கியது இந்த தமிழகம், வேண்டும் என்றால் ஒரே மேடையில் விவாதிக்க தயார்....
ரகு - கேரளா,இந்தியா
2010-12-02 14:07:20 IST
இந்த வயசுல உங்க செலவுக்கு...காசு இல்லேன்னா... பெறபசங்க கிட்ட... வாங்கிக் கொங்க...தாத்தா...
prabagaran - chennai,இந்தியா
2010-12-02 14:06:58 IST
கலைஞர் வாழ்க...
செந்தில் குமார் - riyadh,சவுதி அரேபியா
2010-12-02 14:05:31 IST
நல்லா கேளுங்க அவர் சொல்றார் "அவர் பேரில் இல்லை". எல்லாம் பினாமி பேரில் உள்ளது. அவருக்கு தெரிந்து விட்டது தமிழ் மக்கள் பீகார் மக்களை விட புத்திசாலிகள் என்று. vote இற்கு பணம் கொடுத்தல் தயவு செய்து வாங்கி கொள்ளுங்கள். ஏனன்றால் அது நம் வரிப்பணம் + உழல் பணம் வாங்கிகொண்டு தி மு க விற்கு மட்டும் vote போட்டு அடுத்த 5 வருடத்திற்கு தமிழ்நாட்டை அடகு வைத்து விடாதீர்கள். ஜெய் ஹிந்த்....
Tamilan - chennai,இந்தியா
2010-12-02 13:55:31 IST
@கருணாநிதி: செம்ம காமடி சார் நீங்க... :)...
subbarao - coimbatore,இந்தியா
2010-12-02 13:55:23 IST
என்ன கொடுமை சரவணா .............
சாதிக்.A - தோஹா.கத்தார்,இந்தியா
2010-12-02 13:55:01 IST
நீங்க ரொம்ப நல்லவரு, சிரிக்காம போயி சொல்லுறேங்க...
ரகு - கேரளா,இந்தியா
2010-12-02 13:49:52 IST
ஐயோ...பாவம்....யாராட்சும் ...பிச்சை...போட் டீங்கநா....இந்த....தள்ளாத வயசுல....தலைவரு...மீதி...காலத்தை...ஒட்டிடுவரு......
அப்பாவி தமிழன் - frankfurt,ஜெர்மனி
2010-12-02 13:47:30 IST
ஐயா முத்தமிழ் அறினரே, எங்கள வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே? அப்பாவி தமிழன் நீங்கள் கொடுக்கும் இலவசங்கிளிலும், ஓட்டுக்கு வாங்கும் லஞ்ச பணத்திலும் உங்கள் லஞ்ச ஊழல்களை எல்லாம் மறந்து உங்கள் அறிக்கையை நம்புவான் என நினைத்து விட்டீரோ? அரசியல் சாக்கடையில் இருக்கும் முதலைகளுக்கு இரையாவது எங்கள் விதி.. நீரும் உம் குடும்பமும் வாழ்க!கோடிகளில் தவழும் கேடிகளை நம்பி தெரு கோடி வந்து விட்ட அப்பாவி தமிழன் இருக்கும் வரை நீர் விடும் தினம் ஒரு அறிக்கை....
இளைய சோழன் - மதுரை,இந்தியா
2010-12-02 13:46:56 IST
இந்த ஊரு இன்னுமாடா என்னை நம்புது?...
தமிழன் - சென்னை,இந்தியா
2010-12-02 13:40:49 IST
அப்டேட் சொத்து விவரம் spectrum 10 % ....போதும் தலை வரே வீட்டில் போய் ரெஸ்ட் எடுங்கள்...பாவம் தமிழக மக்கள்...இந்த லிஸ்டில் இன்னும் பல விபரங்கள் விடுபட்டுள்ளன ........
பாலாஜி - சென்னை,இந்தியா
2010-12-02 13:38:50 IST
இது என்ன, நீயா ? நானா? ப்ரோக்ராம்ன்னு நெனைச்சி எல்லாரும் பேசிகிட்டு போறீங்க ! இப்போ நடுவர்களாக காங்கிரஸ் பார்ட்டி ரெண்டு பேர் வந்து முடிச்சுடுவாங்க! So, we all will meet in next Neeya ? Naana? programme with a new topic of : JAYA's Assets !!!...
raman - madurai,இந்தியா
2010-12-02 13:28:40 IST
அவர் சொல்வது சரிதான். அந்த வீடு தவிர வேறு எதுவும் கைக்காசு கொடுத்து வாங்கவில்லை. எல்லாமே அன்பளிப்புதான்....
தமிழன் - சென்னை,இந்தியா
2010-12-02 13:24:39 IST
ஐயா பெருசு உங்க மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன் , எள்ளு பேரன் பெயரில் தான் ட்ரில்லியன் கணக்கில் சொத்துகள் இருகிறதே...
ganesh.k.k - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-02 13:24:12 IST
ayya periyavare intha election pathil sollum unka propertykku wait panni parunka election vera pakkathil varum pothu neenka eppadiyum hospitallil admit aki oru story great pannuvika but athu pona election mattum than mudium so ple stop your own news where is 1.75 crore ple tell me people.so ple people watch this comment....
Mohamed Kayal - jiangmen,சீனா
2010-12-02 13:17:21 IST
சோத்துல பூசணிக்காவை மறைக்கிறான் ஏன்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் பூசணிக்கா செடியய்யே மறைகிறது இன்னைக்குதான்ய கேள்வி படுகிறேன்....
பொய்யன் KARUNANIDHI - chennai,இந்தியா
2010-12-02 13:11:35 IST
அட்ரா அட்ரா அட்ராசக்கை, ரொம்ப முத்திபோச்சி சீக்கிரம் அனுப்புங்கடா...
Radesh - fremontca,இந்தியா
2010-12-02 13:09:54 IST
திரு கருணாநிதி ஊழல் செய்திருக்கிறார் என்றால் அதற்கு தமிழ் நாட்டு மக்கள் எல்லாரும் தான் காரணம், நாம் தானே ஓட்டு போட்டு அல்லது ஓட்டு போடாமல், இயன்ற அளவிற்கு மக்களிடம் அவர் ஊழல் செய்ததை எடுத்து சொல்லாமல் தனது வாழ்கை மட்டும் பார்த்துகொண்டு இருந்துவிட்டு, எப்பொழுதாவது இதுபோல் வரும் பேட்டிக்கு தனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி கருத்து சொல்லிவிட்டு அடுத்த நொடியே தன் சுகம், தன் மக்கள் சுகம் மட்டுமே சிந்திக்கிறோம், நல்ல ஆட்சி ஏற்படுவதிற்கு நாம் என்ன செய்கின்றோம், திரு கருணாநிதிக்கு தண்டனை என்றால், நமக்கும் தண்டனை உண்டு, அவரை மீண்டும் மீண்டும் ஆட்ச்சியில் அமரவைததிர்காக கடந்தகாலம் கடந்தகாலமாகவே இருக்கட்டும், நண்பர்களே சிந்தியுங்கள், இன்று முதல் ஐந்து நிமிடங்களாவது தேசெதிற்காக பாடுபடுவோம் ஊழல் அற்ற ஆச்சி அமைவதிற்கு ஜெய் ஹிந்த் கருணாநிதிஇன் ஊழல் அது...
thamizhan - durban,தென் ஆப்ரிக்கா
2010-12-02 13:09:27 IST
இவங்க அடுத்த election ல வின் பண்ணுன தமிழ்நாடு அவங்களுக்கு தா . மக்களே விழித்திருங்க...
அஜ்மீர் அய்யம்பேட்டை - தஞ்சை,இந்தியா
2010-12-02 13:08:06 IST
ஐயா இப்படியே maintain பண்ணுங்க நாடு முன்னேறும் ........
சாமி - சென்னை,இந்தியா
2010-12-02 13:04:59 IST
அவர் எவவளவு தெளிவா சொல்லிருக்கார் .எந்த சொத்தையும் காசு கொடுத்து வாங்கவில்லை.கோபாலபுரம் வீடு மட்டும் 45000 கொடுத்தது.வந்கினருனு.மத்தது எல்லாம் சுட்டதுங்கன்னா ....
Raja - coimbatore,இந்தியா
2010-12-02 13:03:47 IST
Karunanidhi is very clever politician. He has only told that he has not purchased any major property. He has not told that he has not received bribe. No corrupt person will admit that he is corrupt. There is no doubt that his family members used his position to amass wealth. Since election is nearing, he wants to project himself / to be projected by others as a person who is devoting his life to the cause of poor. However, he is mainly interested in recapturing power and allow his family members to enjoy the power. After Bihar election where performace has won over caste politics, he realised that money power alone is not sufficient to win election....
சுவாமி - கோயம்புத்தூர்,இந்தியா
2010-12-02 12:57:18 IST
மஞ்சள் மகிமை நாடகம் - கலைஞர் T .V மஞ்சள் துண்டு கொள்ளை (கொள்கை ) தமிழன் தலைவிதி வாழ்க ஊழல்.................
இந்தியன் - டாறம்,டென்மார்க்
2010-12-02 12:57:05 IST
தமிழன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு...... இவனுக பண்ணுறத எல்லாம் பதுகுட்டு சும்மா இருக்கோமேன்னு நெனச்சா!...
உஸ்மான் முஹம்மது இப்ராகிம் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-02 12:54:01 IST
கருணாநிதி இப்படிப்பட்ட முழுப் பொய்யை அறிக்கையாக விட்டு செமயாக மாட்டிக்கொண்டார். இங்கு வந்திருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அவரின், அவர் குடும்பத்தின் வுண்மையான முகத்திரையை கிழித்து நார் நாராக பிரித்து துவசம் செய்து விட்டார்கள். இந்த கருத்துக்கள் அனைத்தையும் அவருக்கு அவரின் வுதவியாளர்கள் பவ்வியமாக படித்து காண்பித்து பின்னர் பத்திரமாக ஒரு பொக்கிஷம் போல் பேணவும், வுங்கள் வருங்கால சந்ததிகளுக்கு பேருதவியாக இருக்கும். யோவ் வுமக்கு வெட்கமாக இல்லை இப்படிப்பட்ட ஒரு கேவலமான, கண்மூடித்தனமான அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டதால் இன்று INTERNET என்ற வூடகம் மூலம் ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும், வீட்டின் கழிப்பிடங்களிலும் ஆட்கொண்டுள்ளது, நீர் விட்ட இந்த கேவலமான அறிக்கை வுலகம் முழுவதும் பட்டி தொட்டிகளிலெல்லாம் நாறுகிறது. நீர் என்ன நினைத்துக்கொண்டீர் வும்முடைய வுதாருகளை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை. SPECTRUM இமாலய வூழல் வும் கழுத்தை (வுமது மனைவி, கனிமொழி வுட்பட) நெரிக்க போவது நிதர்சனம் என தெரிந்த வுடன் இந்த கேவலமான அறிக்கை. எதிர்கட்சிகள் மிக மிக தெளிவாக இருக்கிறார்கள்(இந்திய வரலாற்றிலேய முதல் முறையாக !!!!!) கூட்டு பாராளுமன்ற கமிட்டி என்ற அரக்கணை நியமிக்க. கூடிய விரைவில் நீங்களும் வுங்கள் நெருங்கிய சகாக்களும் அடையப் போகும் இன்னல்களை பார்த்து கை கொட்டி சிரிப்பார்கள் வூரார் சிரிப்பார்கள்....
Pooja - chennai,இந்தியா
2010-12-02 12:50:25 IST
அய்யா...... நீங்க இவ்ளோ எழைய எருபிங்கன்னு நெனசிகூட பாக்க முடில. அயோ கடவுளே இந்த ஏழையை காப்பாற்றும்.. ச்ச நல்லா வாய்ல வருது.... இப்படியும் ஒரு ஜென்மமா...நீங்க திருவாரூர்ல இந்த கான்வென்ட்ல சார் படிச்சிங்க.. நீங்க தமிழ் தமிழ் நு சொல்லி உங்க புள்ள பேர புள்ள எல்லாத்தையும் பாரீன்ல படிக்க அனுப்பி வச்சிபுட்டு இங்க உள்ள புள்ளைங்க வாழ்க்கைல விளையாடறீங்களே மத்த மாநிலத்துல உள்ளவங்களுக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு மொழி தெரியுது அனால் இங்க தமிழே தாளம் போடுது.....
karthikeyan - dindigul,இந்தியா
2010-12-02 12:47:15 IST
தமிழன் வாழட்டும்...
மூசி - chennai,இந்தியா
2010-12-02 12:46:08 IST
சம்பவாமி யுகே யுகே. யுகத்திற்கு ஒரு முறை கடவுள் அவதாரம் எடுப்பாரோ இல்லையோ. யுகத்திற்கு ஒரு முறை தான் கருணாநிதி மாதிரி ஒருவர் தோன்ற முடியும். என்ன ஒரு வித்தியாசம், கடவுள் அவதாரம் உலகை காப்பதற்காக....... கருணாநிதி அவதாரம் தமிழ்நாட்டை உரு தெரியாமல் அழிப்பதற்காக. அவர் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு நாம் எத்தனை ஜென்மத்தில் எவ்வளவு பாவம் செய்தோமோ....
Ruthramoorthy - juffair,பஹ்ரைன்
2010-12-02 12:39:30 IST
மாண்புமிகு முதல்வர் அவர்களே,இதான் விடை 13 -05 -2011 அன்று தெரியும்!!!...........
நான் - chennai,இந்தியா
2010-12-02 12:38:08 IST
மக்கள் முட்டாள்கள் என்று நன்கு அறிந்த முதல்வரே நீங்கள் உண்ணா விரதம் இருந்திங்க பாருங்க ச்ச யாராமுலமே இருக்க முடியாதுங்க...
வாசன் - khobar,சவுதி அரேபியா
2010-12-02 12:34:20 IST
நான் முதல் முறையாக முதல்வராக இருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வக்கீல் தவறு செய்த போது அவர் மீது நடவடிக்கை எடுத்தேன்.--- ஏன் அதுக்கு அப்புறம் உங்களோட எந்த உறவினர்களும், நண்பர்களும் தவறு செய்யவில்லையா ? இல்ல "பெருந்தன்மையா" உழல் செய்ய அனுமதிச்சுடின்களா?...
தமிழ் மகன் - சென்னை,இந்தியா
2010-12-02 12:33:02 IST
தமிழ் மக்களே இப்பவாவது புரிஞ்சுகோங்க, கலைஞர் எவ்வளவு உண்மை பேசுபவர் என்று. உங்களுக்கு தெரியாதது இல்லை பூசணிகாயை சோதுக்குல மறைக்க முடியாது. உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன் இந்த கொள்ளையனை தமிழ்நாட்டை விட்டு துரத்துங்கள். நல்லவர்களை தேர்தெடுங்கள். நல்லவர்களை தேர்தெடுக்க முடியாத பட்சத்தில், இவரை எதிர்பவரை தேர்ந்தெடுங்கள் (இப்போதைக்கு வேற வழியில்லை). 100 % நல்லவர்கள் அரசியலுக்கு வர முடியாது. வந்தாலும் நிலைக்க முடியாது....
விஜயகுமார் - வ்ரிட்டசலம்,இந்தியா
2010-12-02 12:30:07 IST
திரு ஜெயலலிதா அவர்களே உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை ரெடி ..... உடனடியா அச்சடிச்சு எல்லா கச்சி காரங்க கிட்ட வினயோகம் செந்ஜிடுகோஓஓஓஓ ...............
PRABU - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-12-02 12:27:31 IST
SUPER COMEDY.... WE ARE EXPECTING MORE COMEDY FROM Mr.kARUNANITHI...
தமிழன் - சென்னை,இந்தியா
2010-12-02 12:26:54 IST
டேய் ஜோபெட் எங்கடா போன, இந்த காமெடி பாருடா. சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாகி விடும் போல இருக்கு. எங்க ஆபீச்ல இன்னைக்கு இது தாண்டா ஹாட் நியூஸ். ஸ்பெக்ட்ரம் தோத்து போச்சு. எல்லோரும் சிரிச்சி சிரிச்சி, யாருமே வேலை செய்யல. இந்த வருசத்தின் சிறந்த காமெடி பீஸ் கலைஞர் தான். சிறந்த நடிகர் கலைஞர் தான், இந்த விசயத்தில கண்டிப்பா நான் அவருக்கு தான் வோட்டு போடுவேன். ஆஸ்கார் இக்கும் பரிந்துரை செய்வேன். இல்லையெனில் போராட்டம் நடத்துவேன். வாழ்க கலைஞரின் தமிழர் சேவை. வாழ்க உண்மை. வாழ்க அரிச்சந்திரன்!...
வெற்றிவேல் - chennai,இந்தியா
2010-12-02 12:26:31 IST
இந்த உலகம் இன்னுமா உன்னை நம்புது? உங்க சொத்தே உங்க மனைவிகள்(??!!...), பிள்ளைகள், பேர பிள்ளைகள், கொள்ளு பேர பிள்ளைகள், எள்ளு பேர பிள்ளைகள் மற்றும் அவகளுககாக கூறுபோட்ட இந்த நாடு... அவ்வளவுதான்.......
A.M.Syed Ahmed - riyadh,சவுதி அரேபியா
2010-12-02 12:24:59 IST
veanaam veanaam MK , naaaaan alutiduyeean...
Pudukai selva - tambaram,இந்தியா
2010-12-02 12:16:29 IST
அரிச்சந்திரன் இல்லாத குறையை நிவர்த்தி செய்து விட்டார் நம் தலைவர்....
சபரி விஜய் - tirupur,இந்தியா
2010-12-02 12:13:26 IST
மச்சா இது காமெடி பிசு டா ஹ ஹ ஹ...
முருகன் - சென்னை,இந்தியா
2010-12-02 12:10:06 IST
சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது இந்த முறை மட்டுமின்றி, நிரந்தரமாக கலைஞர் அவர்களுக்கு, இந்த நடிப்புக்காக வழங்கபடுகிறது....
சின் சாஹி - tokyo,ஜப்பான்
2010-12-02 12:09:50 IST
ஆங்கில படங்களில் வருவது போல பொக்கிஷங்கள் அனைத்தும் கோபாலபுரம் வீட்டிற்க்குள் மறைந்து இருக்குமோ?...
சண்முகம்.M - dubai,இந்தியா
2010-12-02 12:09:02 IST
உங்களிடம் யார் கணக்கு கேட்டது? தமிழ்நாடே உங்கள் சொத்து. தமிழ் மக்கள் உங்கல் குடும்ப மக்கள்.நீங்கள் சொன்னால் வேதம்,தத்துவம்,உண்மை, அரசியல் கலாசாரம்.என்னிடம் இவ்வளவுதான் என்ற நீங்கள், அதற்கு மாறாக ஒட்டுமொத்த தமிழகமும் என் சொத்து என்றிருக்கலாம்....
ஆனந்த் - சிங்கபோரே,இந்தியா
2010-12-02 12:04:21 IST
All tamilians are dead after reading this article. Keep it up Dinamalar.......
தமிழன் - bangalore,இந்தியா
2010-12-02 11:57:00 IST
இந்த நியூஸ் படிக்கும் பொது எனக்கு கவுண்ட மணி ஜோக் தான் நாபகத்துக்கு வருது... "நானும் கேப்மாதிரிய பார்த்து இருக்கேன். மொள்ள மாதிரியா பார்த்திருக்கேன்.. முடிச்சவிக்கிய பார்த்திருக்கேன். இந்த ஒட்டு மொத்தமும் இங்க தான் பார்கிறேன். அடங்கப்பா! இது உலக மகா நடிப்புட சாமி."...
DEVENDRAN - துபாய்,இந்தியா
2010-12-02 11:55:05 IST
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம். தமிழர்களை நன்றாக கிண்டலடித்திருக்கிறார்....
chan - chennai,இந்தியா
2010-12-02 11:54:28 IST
இந்த மாதிரி காமெடி பண்ணும்போதுதான் நிறைய விஷயம் வெளியே தெரிய வருது கலைகரே ....... மக்கள் உங்கள் குடும்பத்தை பற்றி நீறையவே தெரிந்து வைதிர்ருகிரார்கள்... நன்றி மக்களே.... இதுலே உண்மை என்னவென்றால் " இந்த வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை"..... ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்.......
Bala - coimbatore,இந்தியா
2010-12-02 11:45:24 IST
அய்யா, உங்க கதையை நாங்க நம்பறோம். ஆனா உங்க கட்சி காரங்க நம்புவாங்களா? நீ எழுதின இந்த கதைக்கு ஜனாதிபதி அவார்ட் நிச்சயமா கிடைக்கும்...
m.KUMAR - chennai,இந்தியா
2010-12-02 11:43:21 IST
the above talk resembles a crying of a beggar in a busy street....
சுரேஷ் - chennai,இந்தியா
2010-12-02 11:43:14 IST
இது ஒரு மெகா காமடி...
common man - chennai,இந்தியா
2010-12-02 11:40:48 IST
fortunate karunanidhi is able to still talk and cheating public nicely, unfortunately, common man in tamil nadu still has to listen and be bear it....
ஸ்ரீநிவாஸ்.R - madurai,இந்தியா
2010-12-02 11:37:38 IST
ஏழையஆய் பிறப்பது குற்றமல்ல ஏழையஆய் சாவது குற்றம்இன்னு நிரூபிக்க வேண்டாமா? என்ன சார்!...
ஆனந்த் - சென்னை,இந்தியா
2010-12-02 11:37:26 IST
டேய்ய் !!!! குழம்புல போடுவாங்க பருப்பு !!!! பொண்ணுக பசங்க மேல காட்டுவாங்க வெறுப்பு !!! கால்ல போடுவோம் செருப்பு !!! எனக்கு ஊழல்னா ஒரே வெறுப்பு வெறுப்பு !!! டண்ட னக்கா .... டண்ட னக்கா .... டண்ட னக்கா .... ஊழல் பண்ணாம இவ்வளோ சொத்தும் உங்க அப்பன் சேத்து வச்சதா !!!!! எங்க பரம்பரை ஒரு ஆறு தலைமுறையா சொத்து சேக்குறோம் ஒரே ஒரு வீடு தான் இருக்கு ..போய்யா யோவ் ஊழல பத்தி பேச வந்துட்டாரு !!!!!!!... கடுப்பெத்துறான் மை லார்ட் ..............
Tamil - singapore,சிங்கப்பூர்
2010-12-02 11:36:14 IST
கலைஞர் இப்படி ஒப்பாரி வேய்க காராணம் என்ன என்பதை சிந்தித்து பார்த்தல் புரியும். காங்கிரஸ் இவரை கழட்டி விட முடிவெடுத்துள்ளது.1 .76 L கோடி லஞ்ச உழல் பணத்தை தேடி யாரும் தனிடம் கேள்வி கேட்டு விட கூடாது என்ற ஒரு முன் எச்சரிக்கை...
சிவசங்கர் - trichy,இந்தியா
2010-12-02 11:35:51 IST
இந்தியாவில் ஜனநாயகம் என்பது கேலிகூத்து அறிஞர் சொன்னது .இன்று நிரூபணமாகிறது . தாங்கள் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் பிழைத்திருக்கலாம் .இந்த அறிக்கை எங்களை முட்டாள் ஆக்கும் முயற்சி இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பேசாமல் இருப்பதே உத்தமம் .தங்களின் சொந்தபந்தங்களின் சொத்துக்கள் கணக்கில் கொள்ளாதது ஏன் ?...
சே. பொ.பூசைத்துரை - bahrain,இந்தியா
2010-12-02 11:35:01 IST
வரவு,செலவு பற்றிய விவரம் ஊர்,உலகம் நம்ம்பூபடி வெளியுடவேண்டும். முளுபூஜநிகாயை சோற்றில் மறைக்கமுடியாது. எங்களுக்கும் ஆடிட் தெரியும்....
punniyamoorthi - saudi,இந்தியா
2010-12-02 11:34:37 IST
அவர் சொல்லுவது சரிதான் அவரோட பெயரில் எந்த சொத்தும் வாங்கவில்லை அவரின் மனைவிகள் எத்தனை பிள்ளைகள் எத்தனை அதை மட்டுமாவது உன்மையசொல்லுவார...
badrinarayanan - jakarta,இந்தோனேசியா
2010-12-02 11:33:46 IST
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்ளுவார்.தன் பெயரில் சேர்த்தால் பின்னாளில் பிரச்சினை என்பதால் பாவம் அவர் பெயரில் ஏதும் இல்லை ....
குமரன் - ஹைதராபாத்,இந்தியா
2010-12-02 11:33:41 IST
அய்யா மு.க அவர்களே நான் தினமும் தினமலர் செய்தியை வாசிக்கிறேன் அதில் நீங்கள் என்று உங்கள் செய்தி வருகிறதோ அதில் மட்டும்தான் மக்கள் கருத்து அதிகமாக உள்ளது ஒருவராவது உங்களுக்கு சாதகமாக பேசினார்களா இல்லை குறைந்தபட்சம் 50 கருத்துக்களாவது வருகிறது மிகவும் கேவலமாக இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா ......?...........?....?................?...
sony - abudhabi,இந்தியா
2010-12-02 11:32:51 IST
arumaiyana kathai ramanarayananitam kotuthal poonai nayi ellam vaithu oru cinema eduthuviduvar...
snatarasan - chennai,இந்தியா
2010-12-02 11:32:23 IST
புரடா விடுவதிலும் கை தேர்ந்த கலைஞர்!! "என் குடம்பத்தினர், உறவினர்கள் சொத்து குவித்ததற்கு நான் உதவி செய்யவில்லை!" சமயம் வந்தால் தான் தப்பிக்க என்னேவேண்டுமேன்றாலும் செய்வார்! ச.நடராசன்,...
kannan - chennai,இந்தியா
2010-12-02 11:28:46 IST
இவரின் சொத்துகல் பற்றி இவரே சொலி இருக்கிறார். அதனால் இவரின் குடும்ப சொத்துகளை கணக்கிட்டு அவரிடமிருந் பிடுங்க வேண்டும் . இதை செய்பவன் தன உண்மையானவன் . இதை செய்வது BJP மட்டும் முடியும் ....
raja - chennai,இந்தியா
2010-12-02 11:27:13 IST
நீ வாங்கல , எல்லாத்தையும் புடிங்கிட்ட , உன் பேரன் எல்லாம் 60 கோடி 70 கோடி போட்டு படம் எடுக்குறான் எப்படின்னு கொஞ்சம் சொல்ல முடியுமா உன்னால ?...
ஷங்கர் கிர - மதுரை,இந்தியா
2010-12-02 11:24:47 IST
இந்த வருசத்துல நான் கேட்ட கடைசி காமெடி னு நெனைக்குறேன். இதுக்கு மேல காமெடி வேணாம் அய்யா....
கலைங்கர் - singapore,சிங்கப்பூர்
2010-12-02 11:22:26 IST
Everyone is misunderstanding his statement. He already doneted his house and he has no other place to buy in Tamil Nadu as everything he and his family brought it. Nothing left.. Now they are thinking to get outside of Tamil Nadu. World best Joke on 2010....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-12-02 11:21:43 IST
இங்கே சிலர் கருணா குடும்ப சொத்து விவரங்களை விரிவாக எழுதியுள்ளார்கள். இதை படித்த பிறகு, கருணா குடும்பத்தினர் மனதிற்குள் சிரித்துகொள்வர். "இந்த மக்கள் இப்படி மடையர்களாக இருக்கிறார்கள்; எங்கள் சொத்தில் ஒரு சதவிதம் கூட இந்த மக்களுக்கு தெரியவில்லையே!"...
ராஜு - சென்னை,இந்தியா
2010-12-02 11:20:23 IST
"சென்னை : "கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை' என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்" - ஏம்பா இப்படி பிரிச்சி மேயுறீங்க, பாவம் வயசானவர், ஏதோ நாக்குல சனி எத பேசினாலும் காமெடி பீசா தெரியுது. அவர் உண்மைய சொன்னாலும் நீங்க நம்பமட்டேன்றீன்களே. மேற் சொன்ன சொத்துக்களை தவிர வேறு எதையும் அவர் "விலைக்கு" வாங்கவில்லை என்று உண்மையை தானே சொல்லி இருக்கிறார், அப்படி என்றால் மற்ற சொத்துக்களை எல்லாம் எப்படி வாங்கினார் என்று வாசகர் கற்பனைக்கு.................
nagaraj - coimbatore,இந்தியா
2010-12-02 11:17:14 IST
Remaining everything deposited in swiss banks !!!!...
padma - chennai,இந்தியா
2010-12-02 11:16:52 IST
அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி தமிழ் நாட்டை காப்பாத்துவேன் Visit XciteFun.net...
கேசவன் - சேலம்,இந்தியா
2010-12-02 11:16:11 IST
யா சாமீ எங்கள தமிழ்நாடு ல இருந்து யாரவது காபதுங்கள் கருணாநிதி குடும்பம் எங்கள் அடமானம் வச்சுருச்சு (இங்ஙனம் தமிழ் மக்கள்) குடும்ப அரசியல் பண்ணிட்டு பேச்சை பரு லொள்ளு புடிச்ச மொன்ன ..... முக்குல உட்காந்து பிச்ச எடுக்க போகுது என்ன ம ரௌசு உடுது...
ramesh - abudhabi,இந்தியா
2010-12-02 11:15:37 IST
Good joke. Karunanidhi is the best comedian in the world...
jangan - chennai,இந்தியா
2010-12-02 11:14:37 IST
அப்படியா சொல்லவேஇல்ல...
Anniyan - chennai,இந்தியா
2010-12-02 11:13:36 IST
கலைஞரும் அவரது குடும்பமும் இந்த பகுதியிலுள்ள கருத்துக்கள் அனைத்தையும் படிக்க வேண்டும்.. அதன் பிறகாவது, "ம் ஹும், மானங்கெட்ட சென்மங்கள்.. நம்ம தான் டெய்லி ஆஜராகி ஏதாவது கத்திக்கிட்டி இருக்கோம்.. உதயநிதி கலை ஞானி பொண்ணுக் கூட டபுள்ஸ் போறதுக்கு அடுத்த படம் எடுக்க தயாராகிட்டாறு.. யோவ் நான் கூட நல்லா நடிப்பேன்யா.. என்ன வச்சி ஏதாவது படம் எடுங்களேன்.. டெய்லி உங்களுக்கு ஆதரவாக பல, "சாரி இப்ப பல சில என்றாகி விட்டது, சில சொம்புகளுள் ஒரு சொம்பாக கருத்து சொல்றேன்.. ராஜாங்கம் ganesan - tiruchy,India 2010-12-01 19:53:29 IST அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.....
Kannaki - அன்னnagar,இந்தியா
2010-12-02 11:12:22 IST
"இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது?".. அன்பு நண்பர்களே! உங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள். மஞ்சள் துண்டின் உண்மையான சொத்து விவரங்களை இங்கு எழுதுங்கள்.உலக தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்....
கோவை சிவா - கோவை,இந்தியா
2010-12-02 11:09:56 IST
உங்களுக்கு அடியில் இருந்த ராஜாவே 1.75 லட்சம் கோடி என்றால் நீங்க தலைவரு முன்பு பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருகிங்க கணக்கு பாருங்க சொல்லப்போனால் தமிழ்நாடே விலைக்கு வாங்கலாம்....
ராம் - சென்னை,இந்தியா
2010-12-02 11:08:10 IST
நம்பர்களே, தமிழ் நாடு போற போக்க பார்த்த , நம் இளைய சமுதாயம் புதிசாலி தனமா திருடிய தப்பு இல்ல நு நினைசிடுவான்களோ நு தோணுது , இந்த தா தா ஒரு தப்பான எடுத்து காட்ட இருகாரு , நம்ம அடுத்த தலைமுறைய நாம தான் பேணி காக்க வேண்டும், கண்டிப்பாக இந்த சமுதாயம் திருந்த நிறைய நாட்கள் ஆகும் , படித்த நாம படிக்காத நம் பெற்றோர்களுக்கு எடுத்து கூற வேண்டும் , நம்ம பசங்களுக்கும் எடுத்து கூற வேண்டும் , இல்லை எனில் கண்டிப்பாக நாம் ஒரு மோசமான சமுதாயத்தை உருவாக்கி விடுவோம்...
Thamilan - cbe,இந்தியா
2010-12-02 11:08:08 IST
இந்த கொஸூ தொல்ல தாங்க முடியல சாமீ...
மஞ்சள் துண்டு - சென்னை,இந்தியா
2010-12-02 11:07:36 IST
டெல்லி யில் வைகோ ஒபாமா வாழ்கை வரலாறு பற்றி நூல் வெளியிடுகிறார் ஆனால் இங்கோ இந்த மஞ்சள் துண்டு தமிழக மக்களுக்கு நூல் விடுகிறார்....
gulam - mumbai,இந்தியா
2010-12-02 11:07:22 IST
நாங்க நம்பீடேம்...
ஷங்கர் டைரக்டர் - chennai,இந்தியா
2010-12-02 11:07:11 IST
நாங்க ஒரு படம் பண்ண நினைச்சோம். படம் பேரு ஊழல்லோ ஊழல். இவளோ நாலா ஹீரோ தேடிட்டு இருந்தோம் இப்ப நீங்க கேடசுடிங்க. படம் கண்டிப்பா 100 நாள் தலைவா..... கண்டிப்பா ஆஸ்கார் அவாடு உங்களுக்குதான்.... what a performance!...
ச ஸ்ரீனிவாசன் - வெள்ளூர்,இந்தியா
2010-12-02 11:03:50 IST
கருனாநிதி இன் சொதுகனகை அருவித்தார் வுரவினர்கள் சொத்து யார் அருவிப்பர் [வைகோ]அருவிப்பார் என எதிர்பார்கிறோம் .மக்கள் கமிட்டி அமைத்து மிதம் வுள்ள சொத்துகளை அப கரிக்கவும்...
ramajam - chennai,இந்தியா
2010-12-02 11:02:04 IST
அந்த காலத்திலும் அதாவது அறுபதுகளில் அடுக்கு மொழி அண்ணா துரை , கட்டு கதை கருணாநிதி என்று . இப்பவும் அது சரியாக தான் இருக்கு...
நாய் சேகர் என்கிற கருணாநிதி - சென்னை,இந்தியா
2010-12-02 11:00:53 IST
ஏ நல்ல பத்துக்கோ நல்ல பத்துக்கோ நானும் சொத்து கணக்க சொல்லிட்டேன் நானும் நல்லவன்தான் !...
கௌண்டமணி - kodambakkam,இந்தியா
2010-12-02 10:56:51 IST
நீ சொன்னதை அப்படியே தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல செதுக்கிவை பின்னாடி வரும் சந்ததிங்க எல்லாம் பாத்து படிச்சு பயன்பெறுவாங்க. அரசியல இது எல்லாம் சாதரணமப்பா!!....
ramjayam - chennai,இந்தியா
2010-12-02 10:56:44 IST
even in those days of sixties we used to say adukku mozhi Anna Durai and kattu kadhai Karunanidhi endru. ippavum adhu saiyaka thaan irukku...
தில்மர் - கோவை,இந்தியா
2010-12-02 10:54:28 IST
தமிழர்களை ஒழிக்கும் தமிழ்குடிதாங்கி...
பொதுஜனம் - சென்னை,இந்தியா
2010-12-02 10:54:08 IST
இதுவரை ராமதாசுக்குதன் தேர்தல் ஜுரம் வந்துடுச்சுன்னு நினெச்சேன் கருணாநிதிக்கும் வந்துடுச்சு. ராமதாசை மிஞ்சிட்டறு போங்க...
thiruppa - coimbatore,இந்தியா
2010-12-02 10:52:48 IST
இவர் பொலம்பல் தாங்க முடியல சாமி! ,நாங்க நம்பிட்டோம் ,யாருக்கு குத்துரிங்க காது ? தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள் ,எதுக்கு இந்த புலம்பல் ?உங்க மனைவி ,துணைவி , மகன் ,மகள் ,பேரன் ,பேத்தி,கொள்ளு பேரன் ,கொள்ளு பேத்தி ,இவர்கள் பெயரில் உள்ள சொத்து கணக்கை கன்னுடையோர் காண்பதற்காக வெளியிட தயாரா ?...
KarthiC - ஓமன்,இந்தியா
2010-12-02 10:52:42 IST
ஐயா பெரியவரே கொஞ்சம் விட்டா ஊருக்கு போக காசு இல்லன்னு ஏன் , மத்தியான சாப்பாட்டுக்கு கூட வழி இல்லன்னு சொல்லுவீங்க போல இருக்குதே..............அம்மாடி கேககுரவன் கேன பயலா இருந்தா........
ஜெயப்ராக்ஸ் நாராயணன் - சென்னை,இந்தியா
2010-12-02 10:52:33 IST
காமெடி பண்ணாதீங்க பாஸ்...
Director shankar - chennai,இந்தியா
2010-12-02 10:48:46 IST
நாங்க ஒரு படம் பண்ண நினைச்சோம். படம் பேரு ஊழல்லோ ஊழல். இவளோ நாலா ஹீரோ தேடிட்டு இருந்தோம் இப்ப நீங்க கேடசுட்டீங்க. படம் கண்டிப்பா 100 நாள் தலைவா..... கண்டிப்பா ஆஸ்கார் அவாடு உங்களுக்குதான்.... what a performance!...
selvan - chennai,இந்தியா
2010-12-02 10:47:36 IST
we all accept the MK statement. What about his asset in abroad?...
சசி குமார் - chennai,இந்தியா
2010-12-02 10:46:03 IST
உலக மகா நடிப்பு...
காதல்நேசன் - சென்னை,இந்தியா
2010-12-02 10:45:42 IST
ஒன்று புரிகிறது, நாட்டில் 500௦௦ பேர் வேல வெட்டி இல்லாம இருக்கனுங்க. ( கமெண்ட் எழுதினவன்). போங்கப்பா போய் வேலைய பாருங்க, இவரெல்லாம் ஒரு மனிதன், இவரு அறிக்கைக்கு கமெண்ட் வேற,...
பஜ்ஜிபை - chennai,இந்தியா
2010-12-02 10:43:03 IST
மஞ்சள் துண்டு கழுத்திலிருந்து தலைக்கு ஏறும் நாள் நெருங்கிவிட்டது.அதனால் பாவம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.பாவம் தாத்தாவை விட்டு விடுங்கள்....
சூப்பர் வேல்முருகன் - shenzhen,இந்தியா
2010-12-02 10:41:23 IST
நமது வாசகர்களின் கருத்துகளை மேலேயும் அவர் அறிக்கையினை கீழயும் போடுவது சால சிறந்தது. வாய்மை செல்லட்டும் மேலே. பொய்மை செல்லட்டும் கீழே....
Prabhu - erode,இந்தியா
2010-12-02 10:39:44 IST
ரூம் போட்டு யோசிப்பாங்கலோ .....எப்படி எல்லாம் அள்ளி விடறாங்க??!!!!........
க தங்கமாரியப்பன் - tnஸ்ரீவில்லிபுத்தூர்,இந்தியா
2010-12-02 10:37:13 IST
கதை நல்லா இருக்கு படம் எடுங்கள் வருடம் முழுதும் ஓடும்....
No comments:
Post a Comment