சீனாவின் சான்யா நகரம், உலக அழகிகளின் சிறு கூடாரமாக மாறியிருக்கிறது. 2010 ற்கான உலக அழகிகள் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சீனா பெற்றதையடுத்து, ஏதோ ஒலிம்பிக் போட்டிகள் மறுபடி கிடைத்தால் போல் சந்தோஷப்படுகிறார்கள் அம்மக்கள்.
போட்டியை நடத்த நல்ல வாய்ப்பிருந்தும், வியட்நாம் ஒதுங்கிக்கொண்டதால் சீனாவுக்கு அதிர்ஷ்ட்டம் அடித்தது. சான்யா நகரம் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்.16 முதல் 26 வரை பல பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.அக்டோபர் 30ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, மனஸ்வி மம்கை போட்டியிடுகின்றார்.
முதற்தடவையாக அனுஷா ராஜசேகரன் எனும் பெண், மிஸ் சிங்கப்பூராக, உலக அழகிப்போட்டிகளில் கலந்துகொள்கிறார். அனுஷா சரளமாகத் தமிழ்ப் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றில் விளம்பர நிர்வாக அதிகாரியாகப் பணிபுரியும் இவர், சிங்கப்பூரில் எம்டிஐஎஸ் பள்ளியில் உயிர்மருத்துவத் துறையில் பட்டப் படிப்பு படிக்கிறார். இவரது உயரம் 1.69 மீட்டர். இவர் பரதநாட்டியம் கற்றவர்
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பலோன் ரனசிங்க கலந்துகொள்கிறார்.
Related Videos
No comments:
Post a Comment