Saturday, August 28, 2010

"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை(A guy ask Tamilnadu CM to change all hot drink(saraku)s name in to tamil)i

கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, dinamalaruku அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.

தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, "குடி'மக்களை, "தமிழ் குடிமக்களாக' மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க...

அவர் அனுப்பியுள்ள பட்டியல்:

சரக்கு பெயர் தமிழ் பெயர்

1. மிடாஸ் கோல்டு - தங்கமகன்
2. நெப்போலியன் - ராஜராஜசோழன்
3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்
4. வின்டேஜ் - அறுவடைத் தீர்த்தம்
5. ஆபிசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்
6. சிக்னேச்சர் - கையொப்பம்
7. ஓல்டு மங் - மகா முனி
8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு
9. கேப்டன் - தனிச் சரக்கு
10. ஜானிவாக்கர் - வெளியே வா
11. ஓட்கா - சீமைத்தண்ணி
12. கார்டினல் - பொதுக்குழு
13. மானிட்டர் - உளவுத்துறை
14. பேக் பைப்பர் - "ஊத்து'க்காரன்
15. சீசர் - கரிகாலன்
16. மெக்டவல் - "மட்டை' வீரன்
17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை
18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
19. ராயல் சேலன்ஞ் - நாற்பதும் நமதே
20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000
21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு
22. கோல்டன் ஈகிள் - தங்க கழுகு
23. கிங் பிஷர் - மீன்கொத்தி
24. மார்பியூஸ் - மயக்கி

Source dinamalar

No comments:

Post a Comment