இன்போசிஸ் உள்ளிட்ட இந்திய மென்பொருள் நிறுவனங்களை 'திருட்டுப் பொருள்' கடைகள் என்று தரக்குறைவாக பேசியிருக்கிறார், அமெரிக்க செனட்டர் ஒருவர்!
மெக்ஸிகன் எல்லைப் பகுதியில் பாதுகாப்புகளை பலப்படுத்துவதற்காக $600 மில்லியன் அளவுக்கு நிதி ஒப்புதல் வழங்குவது தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் அண்மையில் விவாதம் நடந்தது.
அப்போது பேசிய நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சி செனட்டர் சார்லஸ் இ ஷூமெர், "இந்த அவசரகாக எல்லைப் பாதுகாப்பு நிதி, அமெரிக்க தொழில்நுட்ப வேலைகளை குறைந்த சம்பளத்துக்குச் செய்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த'திருட்டுப் பொருள் கடை' (Chop Shops) நிறுவனங்கள் வரும் தற்காலிக பணியாளர்களுக்காகவே பெரிதும் பயன்படும்.
எனவே, இன்போசிஸ் போன்ற அவுட்சோர்ஸிங் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விசா தொகையை வசூலிப்பது பொருத்தமானதாக இருக்கும்," என்றார் அவர்.
'சாப் ஷாப்' என்றச் சொல், கார் உள்ளிட்ட வாகன உதிரிப் பாகங்களை திருடி விற்கும் கடைகளையே குறிக்கும்.
இன்போசிஸ் போன்ற நற்பெயர் கொண்ட இந்திய மென்பொருள் நிறுவனங்களை திருட்டுப் பொருள்களை விற்கும் கடைகள் என மலிவாக, அமெரிக்க செனட்டர் விமர்சித்திருப்பது இந்தியத் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டின் எதிரொலியாக, ஹெச்1 பி விண்ணப்பக் கட்டணம், இந்திய ஐ.டி. துறையினர் பெரும்பாலானோரும் பெருகின்ற எல் 1 விசாக்களின் கட்டணங்கள் அதிகரிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
மதிப்பு மிக்க இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களை கீழ்த்தரமாக அமெரிக்க செனட்டர் விமர்சித்திருப்பது எதைக் காட்டுகிறது?
வாருங்கள் விவாதிப்போம்!
No comments:
Post a Comment