Friday, September 17, 2010

கணினி தொழில் நுட்பம்: பெங்களூரை முந்த வேண்டும் - ஒபாமா

இந்தியாவில் உள்ள பெங்களூர், சீனாவில் உள்ள பீஜிங் நகர மாணவர்கள் கடுமையாக உழைத்து முன்னணி நிலையில் உள்ளனர். அதேபோல அமெரிக்க மாணவர்களும் கடுமையாக உழைத்து பெங்களூர், பீஜிங் நகரங்களை முந்த வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பிலாடல்பிவா நகரில் இன்று நடந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்டு ஒபாமா பேசினார்.

அவர் பேசியதாவது:-

இப்போது அமெரிக்காவுடன் தொழில் நுட்பங்களில் பல்வேறு நாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் உள்ள பெங்களூர், சீனாவில் உள்ள பீஜிங் நகர மாணவர்கள் கடுமையாக உழைத்து முன்னணி நிலையில் உள்ளனர். அதேபோல அமெரிக்க மாணவர்களும் கடுமையாக உழைத்து பெங்களூர், பீஜிங் நகரங்களை முந்த வேண்டும்.

நீங்கள் கல்லூரி அளவில் வெற்றியாளராக திகழ்ந்தால் மட்டும் போதாது. 21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவை வெற்றி பெற செய்ய நீங்கள் உங்கள் பங்களிப்பை தரவேண்டும். அந்த கடமை உங்களுக்கு இருக்கிறது.

எனவே எல்லா வகையிலும் திறன் உள்ளவர்களாக நீங்கள் உருவாக வேண்டும்.

நமக்கு முன்பு ஏராளமான சவால்கள் உள்ளன. அதை உங்களுடைய கடின உழைப்பு மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

கம்ப்யூட்டர் தகவல் தொழில் நுட்பத்தில் உலகில் முன்னணி நகரமாக பெங்களூர் திகழ்கிறது. அமெரிக்க நிபுணர்களையே பெங்களூர் தொழில் நுட்ப வல்லுனர்கள் முந்தி நிற்கிறார்கள். இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமா பெங்களூரை அமெரிக்காவுடன் ஒப்பிட்டு அடிக்கடி பேசி வருகிறார்.

No comments:

Post a Comment