ஆசிய விளையாட்டு போட்டியில் குரூப் ஆப் டெத்தாக கருதப்படும் 'டி' பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் கடந்த முறை தங்கம் வென்ற கத்தார்,குவைத்,சிங்கப்பூர் அணிகளுடம் இடம் பெற்றுள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டி வருகிற நவம்பர் 12ஆம் தேதி சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கால்பந்து பிரிவில் கலந்து கொள்ளும் அணிகள் யார் யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆசியாவின் வலுவான அணியாக கருதப்படும் கத்தார் இதே பிரிவில் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆசிய போட்டியில் கத்தார் தங்க பதக்கம் வென்ற அணி ஆகும்.
குவைத்,சிங்கப்பூர் 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிற அணிகள்.இந்த இரு அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.'பிபா' தரவரிசையில் இந்த இரு அணிகளும் இந்திய அணியை காட்டிலும் 40 புள்ளிகள் முன்னிலையில் உள்ளன. இதில் குவைத் மேற்கு ஆசிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி ஆகும். சிங்கப்பூர் ஆசிய கோப்பை போட்டிக்காக சிறப்பாக தயாராகி வருகிறது.
இதனால் ஆசிய போட்டியில் இந்திய அணி 2வது சுற்றுக்கு முன்னேற கடும் சவால் காத்திருக்கிறது.இந்திய அணியின் 23 வயதுக்குட்பட்ட அணியே ஆசிய போட்டியில் கலந்து கொள்கிறது.
ஆசிய போட்டியில் எந்த பிரிவில் யார்?
பிரிவு ஏ-சீனா, கிர்கிஸ்தான், மலேசியா, ஜப்பான்
பிரிவு பி-ஈரான், வியட்நாம், பஹ்ரைன், துர்க்மெனிஸ்தான்
பிரிவு சி-தென்கொரியா,வடகொரியா, பாலஸ்தீனம், ஜோர்டான்
பிரிவு டி-கத்தார், குவைத், இந்தியா, சிங்கப்பூர்
பிரிவு இ-உஸ்பெஸ்கிஸ்தான், ஐக்கிய அரபு குடியரசு,ஹாங்காங்,பங்களாதேஷ்
பிரிவு எப்-தாய்லாந்து, மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான்
(நன்றி தமிழ்ஸ்போர்ட்நியூஸ்டாட்காம்)
No comments:
Post a Comment