ஓட்டுநர் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை போக்குவரத்துத் துறை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்ய ஆன்லைனில் http://transport.tn.nic.in என்ற வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக பயனாளர்களுக்கு ஒப்புகை சீட்டு வந்துவிடும்.
அதில் உள்ள எண்ணை குறித்துக் கொண்டு மறுநாளே சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தில், கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால், உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
மனுதாரர் தனக்கு விரும்பிய நாளையும், சேரத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.
இந்த முறையில் ஆன்லைனில் எல்.எல்.ஆர். விண்ணப்பம் செய்வதால் மனுதாரர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நேரம் தவிர்க்கப்படும்.
மனுதாரருக்கு அவர் செய்யும் விண்ணப்பத்துக்கு ஒப்புகை அட்டையும் கிடைக்கிறது. மனுதாரருக்கு விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் தேர்வு செய்துகொள்ளலாம். மனுதாரர் அவருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம் முதலான விவரங்களை பிழையின்றி பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment